-கிண்ணியா நிருபர்-
முன்னாள் தமிழக முதலமைச்சரும் மக்கள் திலகமுமான புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜீ . இராமச்சந்திரன் அவர்களின் 107 வது பிறந்த நாள் நினைவாக திருகோணமலை – பெரியகுளம் பாடசாலை மற்றும் 6 ம் கட்டை பகுதியில் கற்கும் வறிய மாணவர்களுக்காக வில்வராசா என்னும் தனி நபரின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் ஸ்தாபக தலைவர் கனகசபை தேவகடாட்சம் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் சமூக மேம்பாடு பற்றி சிறப்புரையாற்றினார்.

