மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்டுப் பண்ணையால் பாரிய துர்நாற்றம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட ஆட்டு பண்ணையால் அதற்கு அருகாமையில் குடியிருக்கும் மக்கள் இருக்க முடியாது பெரும் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு எழுத்து மூலமான முறைப்பாடளித்தும் உரிய பகுதி பொது சுகாதார பரிசோதகர் அதனை பார்வையிட்டும் முறைப்பாடு தொடர்பில் எது வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் குறித்த ஆட்டு பன்னையால் கடுமையான துர் நாற்றம் காரணமாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய காலம் மழை காலம் ஆகையால் அதனை அண்டிய குடியிருப்பு பகுதி மக்கள் பெரிதும் துர்நாற்றத்தை எதிர்நோக்குகின்றனர். இதன் மூலம் சுவாசிக்க முடியாது வாந்தி பேதி,தலையிடி போன்ற நோய் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு குழந்தைகள் இருக்கும் அப் பகுதி சுகாதாரத்துக்கு முரணாக குறித்த ஆடு வளர்ப்பு மேற்கொள்ளப்படுவதால் துர் நாற்றம் அதிகரித்து சூழலை பாதிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே ஆட்டுப் பண்ணையை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

