– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் மகாத்மா காந்தியின் 155 வது ஜனன தினம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மட்டக்களப்பு வர்த்தக சங்க செயலாளர் கே.தியாகராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன், “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடல் பாடி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்





