பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் 14 வயது சிறுமி தனது தந்தையை சுட்டுக்கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்துடன், தொடர்புடைய சிறுமி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, தனது தந்தை தன்னை கடந்த 3 மாதங்களாக பலாத்காரம் செய்ததாகவும் இதனால் கோபமடைந்த குறித்த சிறுமி, தனது தந்தையை கொலை செய்வது என முடிவெடுத்துள்ளார்.
பின்னர் தந்தையின், துப்பாக்கியினால் அவரையே சுட்டுக்கொலை செய்துள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.