மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அளுதேபொல பகதியை சேர்ந்த 74 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மகள் முதல் திருமணத்தில் இருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்து. இதில் தந்தை தலையிட்ட போது குறித்த நபர், பொல்லினால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.