பண்டாரவளை பகுதியில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் மீண்டும் தோண்டி எடுத்து, ஆடைகளை கழற்றி நிர்வாணமாகப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா மதுஷானி (வயது – 24) என்பவரின் சடலமே இவ்வாறு கிடந்துள்ளது.
கடந்த புதன்கிழமை நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலத்தை அனைத்து மத சடங்குகளுக்கு பின் மறுநாள் புதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த யுவதியின் பிறந்த தினமான இன்று ஞாயிற்று கிழமை யுவதியின் தந்தை கல்லறைக்குச் சென்றுள்ளார். அப்போது தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, ஆடைகள் இன்றி நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.