பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் 50 வயதுடைய பெண்ணொருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட மகனின் உதவியுடன் சடலம் தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கணவர் மற்றும் மூத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை தொடர்பில் பெண்ணின் 70 வயது கணவர் மற்றும் அவர்களது 26 வயதான மூத்த மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பெண் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
தந்தை , மகன் மற்றும் தாய்க்கு இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகநபரான கணவர் மனைவியை தாக்கிவிட்டு பின்னர் மூத்த மகனின் உதவியுடன் சடலத்தை தோட்டத்தில் புதைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.