நுவரெலியா – வட்டவளை லொனோக் தோட்ட பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பௌசர் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
லொனோக் தோட்ட பகுதியிலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்திலிருந்து பாலினை பதப்படுத்துவதற்கு மீரிகம பகுதிக்கு பால் ஏற்றி சென்ற பௌசர் வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தின் போது சாரதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.