-பதுளை நிருபர்-
போலி 5000 ரூபா நாணயத்தாள் ஒன்றுடன் 34 வயதுடைய நபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது.
போலி 5000 நாணயத்தாள் கைவசம் வைத்திருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், லியங்காமண்டிய பழைய மஹியங்கனை வீதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.