தெஹியோவிட்ட பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை போலியாக தயாரிக்கப்பட்ட கஜமுத்துகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாவனெல்ல மற்றும் பிலிமத்தலாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹியோவிட்ட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 19 கிராம் 400 மில்லிகிராம் நிறையைக் கொண்ட கஜமுத்துகளும் அவர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.