-பதுளை நிருபர்-
எல்ல பகுதிக்கு சுற்றுலா வந்த போலந்து பிரஜை ஒருவரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் அடங்கிய பணப்பையை காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக எல்ல சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
பிராடோஸ்க் பாவெல் கலிஸ் என்ற பிரஜை முச்சக்கரவண்டியில் லிப்டன் சீட் பகுதிக்கு வருகை தந்து நீர்வீழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்த போது பணப்பையை இழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பணப்பையில் 55,000 ரூபா, 300 யூரோக்கள் மற்றும் 50 அமெரிக்க டொலர்களும், தனது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமும் இருந்ததாக போலந்து நாட்டவர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, எல்ல சுற்றுலா பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி திஸாநாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.