-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -உட்துறைமுக வீதியில் இடம் பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை கஸ்தூரி நகர் பகுதியை சேர்ந்த கருப்பையா கருணாநிதி (வயது – 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி குறித்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மூதூர் டிப்போவுக்கு சொந்தமான பேருந்துடன் மோதி படுகாயம் அடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.