அக்குரஸ்ஸ தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் சிக்கியதில் குழந்தையொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளது.
தலாகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு வயதும் 15 நாட்களுமேயான குழந்தையொன்றே இவ்வாறு மரணித்துள்ளது.
குழந்தையின் சகோதரர் மூடியை அகற்ற முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து குழந்தை சிகிச்சைக்காக கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.