கண்டி – நுகவெல பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவன் போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யபப்பட்டுள்ளார்.
வரெல்லகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே கைதாகியுள்ளார்.
கைதான மாணவன் தனது பாடசாலையில் உள்ள சக மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரைகளை விநியோகிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடத்திலிருந்து 6 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.