-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த என். எல். டி. ஞானக வதுரங்க கருணாரத்ன (வயது – 33) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நிலாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போது அலஸ்தோட்டம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது கைது செய்யப் பட்டதாகவும் அவரிடமிருந்து 25 கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதனை தொடர்ந்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.