யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நால்வரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.