போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை பெரியகுளப் பகுதி கிராமத்தில் போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகமொன்று நேற்று சனிக்கிழமை லீட்ஸ் நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

இதன் போது கிராமங்களில் உள்ள பிள்ளைகள் தங்களுடைய கிராமங்களில் உள்ள பிரச்சைனைகளை அடையாளம் கண்டு அவற்றை குறைப்பதற்கான வழிமுறைகளான வீதி நாடகமாகவும் போஸ்டர் பிரச்சாரமாகவும் திருமால்புரம் கிராமத்தில் விழிப்புணர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.

போதை பாவனையால் ஏற்படும் தீய விளைவுகள் குடும்பம் சமூகத்தில் பாதக பாதக விளைவுகளை எப்படி ஏற்படுத்துகிறது என்பது தொடர்பில் இவ் வீதியோர நாடகத்தில் எடுத்துக்காட்டப்பட்டது இதனை சிறுவர் மட்ட கழக உறுப்பினர்கள் பல கதாபாத்திரங்களை வைத்து திறம்பட நடித்து காட்டியுள்ளனர். இதில் லீட்ஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.தஸ்லீம், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், சமூக மட்ட அடிப்படையிலான சிறுவர் தலைமைத்துவ செயத்திட்டத்தினை குறித்த நிறுவனமானது குச்சவெளி பிரதேச செயலகத்துகுட்பட்ட நாவற்சோலை, சலப்பையாறு, பெரியகுளம், திருமால்புரம், அடம்போடை மற்றும் வேலூர் ஆகிய 6 கிராமங்களில் செயற்படுத்தி வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்