களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் பிரபலமான பாடசாலைகளும் அடங்கும். மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுப்படுவதால் குறித்த பாடசாலைகளின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என அவற்றின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாடசாலை சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். இந்த போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை காப்பாற்ற விசேட விழிப்புணர்வு திட்டங்களை செயற்படுத்தி உள்ளதாகவும் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.