காலி நெலுவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்மலஹேன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நெலுவ, தும்மலஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று வெள்ளிக்கிழமை தனது நண்பருடன் மதுபானம் அருந்திக்கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.இதில் சந்தேக நபர் உயிரிழந்தவரை கல்லால் தாக்கியதில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை நெலுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.