-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல நாட்களாக ஹெரோயின் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, இன்று திங்கட்கிழமை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா தாயிப் நகர், நடுவூற்று சுனாமி வீட்டுத் திட்டத்தில் வசித்து வரும் 37 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து 07 கிராம் 410 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், குறித்த நபர் தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.