நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் போதைப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வேறு மாற்று முறைகளை நாடியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
போதை பொருளுக்கு அடிமையானவர்கள் மருந்தகங்களில் அதிக விலைக்கு போதை சார்ந்த மருந்துகளை வாங்கிச் செல்வதாகவும் இதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்த பல மருந்துக் கடைகளின் உரிமையாளர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.