கொழும்பில் போதை பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
போதைப்பொருள் இல்லாததால் உடலில் வெட்டுக்காயங்களை அவரே ஏற்படுத்திய பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.