தங்காலை-வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த “லாரா” என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபருக்குச் சொந்தமான 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான வீட்டின் பயன்பாட்டை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.
குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குறித்த வீட்டைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










