வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த 494 கிலோ 48 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள், புத்தளம் – பாலாவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டல் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை எரியூட்டி அழிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து குறித்த போதைப்பொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து, அவற்றை விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு சென்று எரியூட்டி அழிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.