கம்பஹா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா – வத்துமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவரேர இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது 5 கிராம் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.