மொனராகலை சிறிகல பொது வைத்தியசாலைக்கு அருகில் மொனராகலை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 6940 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை சிரிகல இரத்தினபிட்டிய இலக்கம் 70 இல் வசிக்கும் 32 வயதுடையவரே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.