குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் இந்தியா – சென்னையில் மொபைல் போன் கடை நடத்தி வரும் 45 வயது தொழிலதிபர் ஆவார்.
குறித்த நபர் தாம் கொண்டுவந்த பொருட்களுடன் போதைப்பொருளை மறைத்து, இனிப்புகள் மற்றும் சாக்லேட் பொட்டலங்களாக தயாரித்து கொண்டுவந்துள்ளார்.
அவரிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருந்து 1 கிலோ 40 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்