நாட்டின் தெற்கு கடற்கரையை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் பெருமளவான போதைப்பொருட்களுடன் பயணித்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினரும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் குறித்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகுகள் கொழும்பு – திக்கோவிட்ட துறைமுகத்துக்குத் தற்சமயம் கொண்டுவரப்படுவதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.