கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைய சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த மூத்த சகோதரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருலப்பனை பிரதேசத்தில் ஹைலெவல் வீதியைச் சேர்ந்த ஆர். ஏ அமில சந்தருவன் (வயது – 29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பில் 32 வயதுடைய மூத்த சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.