போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த டிசம்பர் மாதம் முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது.
இரண்டு நாட்கள் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் கடந்த டிசம்பர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் கூட்டமொன்றில் பௌத்த, இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் போதகர் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
அவரது கருத்துகளின் வீடியோ காட்சிகள் நாட்டில் உள்ள பௌத்த மதத்தை பின்பற்றுபவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சலசலப்பைத் தொடர்ந்து, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்த அவர் இலங்கை வந்தவுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.