போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று மதியம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இரண்டாவது நாளாக முன்னிலையானதை அடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதன்போதே, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் இடம்பெற்ற போதனையின் போது, பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.