கொழும்பின் மூன்று இடங்களில் நிறுத்துமாறு பொலிஸார் விடுத்த உத்தரவை மீறி பயணித்த டிபெண்டர் வாகனத்தில் இருந்த 4 யுவதிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் கல்வி கற்று நாவல மற்றும் கொழும்பு பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 19 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானை டீன்ஸ் வீதியில் அஜாக்கிரதையாக பயணித்த டிபெண்டர் வாகனத்தை நிறுத்துமாறு மருதானை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள் சமிக்ஞை செய்ததாகவும் அதனைத் தவிர்க்க முற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகளையும்இ டிபெண்டர் வாகனத்தையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக மருதனை பொலிஸார் தெரிவித்தனர்.