சிலாபம் – புத்தளம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ – ஹலம்பவடவன பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிவரை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பிடிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் துரத்தி சென்றுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அவர் சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
சந்தேக நபரை தேடி ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.