
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சீருடை தைக்கும் தையல்காரர் கைது
களுத்துறை மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சீருடை தைத்து வழங்கும் தையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை பொலழஸார் சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ 880 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் களுத்துறை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
