அம்பலாந்தோட்டை பகுதியில் பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருளை விற்பனை செய்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த பகுதிக்கு பொலிஸார் சிவில் உடையில் சென்றுள்ளனர்.இதன்போது, போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர்இ சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளார்.
பின்னர் குறித்த போதைப்பொருள் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.