கொழும்பில் காரில் பயணித்த சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்காகவே பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குறித்த துப்பாக்கிச்சூட்டினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.