பேராதனை முரதலாவ பிரதேசத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நீதிமன்றத்தில் பிடியாணை பெற்ற சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி வட்டுவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக கொள்ளை மற்றும் நீதிமன்றத்தை புறக்கணித்தமை தொடர்பில் 2 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் சந்தேகநபரை கைதுசெய்வதற்காக சென்ற வேளையில் அவர் பொலிஸாரை தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். அதன்போது, பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.