மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று புதன் கிழமை இரவு முதல் வினாடிக்கு 3000 கன அடி வீதம் நீர் திறந்துவிடப்படுவதுடன் தற்போது மகாவலி கேஜ் மனம்பிட்டிய நீர் மானி 4.06 வரை பதிவாகியுள்ளது.
பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் “கல்லெல்ல பாலத்திற்கு” அருகாமையில் பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியின் ஊடாக 1 அடிக்கு மேல் நீர் செல்கிறது. இருந்த போதும் இது வரை போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
மேலும் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.