பொலனறுவை பகுதியில் பேஸ்புக் காதலால் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, ஜா-எல மற்றும் வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் பொலனறுவை பகுதியில் வீடொன்றுக்கு சென்று பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்று கிழமை மூன்று பெண்களை பொலன்னறுவை பொலிஸார் கைது செய்தனர்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதுடன் இவரின் மகனும் தாக்கப்பட்ட யுவதியும் காதலிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட ஏனைய மூவரில் ஜா-எல மற்றும் வெலிவேரிய பிரதேசங்களில் வசிக்கும் 16 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஜோடி பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி காதலில் விழுந்துள்ள நிலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.