நேபாளத்தில் பல சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் வாட்ஸ்அப் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட 23 முக்கிய சமூக வலைத்தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அரசின் பதிவு விதிமுறைகளுக்கு இணங்காதமைக்காக அந்நாட்டு அரசாங்கம் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனங்களுக்குப் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டும் அவை பதிலளிக்கவில்லை என்று நேபாள அரசு கூறியுள்ளது.