பம்பலப்பிட்டி பகுதியில் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை பாரவூர்தி ஒன்றுடன் குறித்த பேருந்து மோதி வீதியில், குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.