பேருவலையில் நேற்று செவ்வாய் கிழமை இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 6 பேர் காயமடைந்து பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காலி – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்தும், கொழும்பு – கதிர்காமம் நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.