புத்தளத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து சென்ற வேன் ஒன்று வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதியதுடன் பேருந்து மற்றும் வேன் ஆகியன வீதியை விட்டு விலகி அருகிலிருந்த உணவகங்களை உடைத்துக் கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது வேனில் பயணித்த இருவரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உவேனின் சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.