நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணமான லாகோஸ்-படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று வித்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மோவோ நகர் அருகே குறித்த பேருந்தானது அதன் முன்னால் சென்ற மணல் லொரியை கடக்க முயன்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி லொரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.