கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று திங்கட்கிழமை காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதியதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வீதியில் அதிகாலை ஐந்து மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.