கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்து வேகமாக பயணித்ததால் கொடக்காவலை பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.