வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் பேருந்து ஒன்று இன்று புதன் கிழமை விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, லொறியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.