மொனராகலை – வெல்லவாய வீதியில் மதுருகெட்டிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டியின் சாரதி படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கெப் வண்டியின் சாரதியான டபிள்யூ.ஏ.உதய குமாரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
மொனராகலையிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கதிர்காமம் லங்காம டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தும் ஒக்கம்பிடியிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கெப் வண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.