இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
55 பயணிகளை ஏற்றி சென்ற குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் விழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.