மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் 18 ஆம் கட்டைப்பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பேருந்து மீது தண்ணீர் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாழைச்சேனை மீராவோடை வழியாக அக்கரைப்பற்று செல்லும் பேருந்து மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேருந்தின் கண்ணாடிகள் வெடித்துச்சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது
தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

